Tamil News Channel

Blog Post

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை..!

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் குறித்து பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது. போர் பதற்றத்தை தணிக்க வழிமுறைகளை கண்டறியும்படி பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளதோடு மோதலை தவிர்க்க ஆக்கப்பூர்வ பேச்சுக்களை இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் எனவும் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான உதவிகளை செய்ய அமெரிக்கா தயார் என்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடன் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ பேசியுள்ளார்.

Read More

இந்தியா தாக்குதல்களை நிறுத்துமாயின் நாமும் தாக்குதல்களை நிறுத்துவோம் – பாகிஸ்தான்!

இந்தியா தாக்குதல்களை நிறுத்துமாயின் தாமும் எதிர்த் தாக்குதல்களை நிறுத்துவதற்குத் தயாராகவுள்ளதாகப் பாகிஸ்தானின் துணை பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான இஷாக் தார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோயிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை பொறுமையை இழந்ததால்தான் தாக்குதலை தொடங்கினோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Read More

கொட்டாஞ்சேனை மாணவி ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை உறுதி!

உயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரான ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த தில்ஷி அம்ஷிகா என்ற 16 வயது மாணவி கடந்த […]

Read More

அரிசி மாபியாவை கூட்டுறவுத்துறையால் மாத்திரமே கட்டுப்படுத்த முடியும் – ஆளுநர் வேதநாயகன்!

அரிசி மாபியாவை கூட்டுறவுத்துறையால் மாத்திரமே கட்டுப்படுத்துவதற்கு முடியும். தனியார் துறையினர் இலாபத்தை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டே செயற்படுவர். ஆனால் கூட்டுறவுத்துறை சேவையை அடிப்படையாகக் கொண்டு சிறியதொரு இலாபத்துடன் மாத்திரமே செயற்படும். அதனாலேயே, கூட்டுறவுத்துறையை வலுப்படுத்துவதன் ஊடாக அரிசி மாபியாவை எதிர்காலத்திலாவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இளம் ஆய்வாளர்கள் வலையமைப்பு நடத்திய இளம் கூட்டுறவாளர் மாநாடு தந்தை செல்வா அரங்கில் இன்று சனிக்கிழமை (10.05.2025) இடம்பெற்றது. இதில் முதன்மைப் […]

Read More

இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கல்..!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  துள்ளு குடியிருப்பு பகுதியில் இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை (10) காலை இடம்பெற்றது. ‘ஈகில் ஐ இன்டர்நேஷனல் நெட் வர்க் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் அனுசரனையுடன் மன்னார் துள்ளு குடியிருப்பு கிராம பகுதியில் 39 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு இலவசமாக மூக்கு கண்ணாடிகளும் வழங்கப்பட்டது. கொழும்பிலிருந்து வருகை தந்த  வைத்தியர்கள் இப்பரிசோதனையை […]

Read More

செப்புக் கம்பி மற்றும் தொலைபேசி கேபில்களுடன் இருவர் கைது..!

மன்னார் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட  முறைப்பாட்டுக்கு அமைய இன்று (10) மன்னார் ஜிம்ரோ நகர் பகுதியில் 2 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 17 கிலோ 200 கிராம் செம்பு கம்பி மற்றும் தொலைபேசி கேபிள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 19 வயதுடையவர்கள் என்று  தெரிய வருகிறது. குறித்த சந்தேக நபர்களை மாவட்ட  குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி உ.பொ.ப மதுரங்க அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டனர். மன்னார்  மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  சந்திரபாலவின் […]

Read More

மாற்று வலுவுள்ளோரிற்கு செயற்கை அவயவங்கள் வழங்கும் நிகழ்வு..!

செயற்கை அவயவங்கள் வழங்கும் நிகழ்வு மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் ஏற்பாடு செய்யப்பட்ட செயற்கை அவயவங்கள் வழங்கும் நிகழ்வு மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் வளாகத்தில் இடம்பெற்றது. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இயலாமையுள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களை வலுவுட்டும் நிறுவனத்தின் ஏற்ப்பாட்டில் இலங்கையின் ஆஸ்திரேலியா தூதரகத்தின் நிதி ஏற்பாட்டில் கண்டி மாற்றுத்திறனாளிகளுக்கான மையத்தினரால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த 25 பேருக்கு கை மற்றும் கால் அவயவங்கள் வழங்கி […]

Read More

தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசியத்துடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த வெற்றி – கஜேந்திரகுமார் எம்.பி!

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் அதற்கு கிடைத்த ஆணையாகவும் அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்பாணத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில், நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய பாதையிலிருந்து தமிழ் மக்கள் படிப்படியாக விலகி வருகின்றார்கள் என்று ஒரு செய்தி பரப்பப்பட்டு வந்தது. இவ்வாறான ஒரு காலச் சூழலில் பிரதேசத்தின் அபிவிருத்தியை […]

Read More

யாழில் கடை உரிமையாளர் மீது இனந்தெரியாத கும்பல் சரமாரி தாக்குதல்..!

அச்சுவேலியில் இன்று காலை இனந்தெரியாத கும்பலொன்று நடத்திய தாக்குதலில் கடை உரிமையாளர் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார். இன்று அதிகாலை 6.15 மணியளவில் அச்சுவேலி வைத்தியசாலை வீதியூடாக தனது கடையினைத் திறப்பதற்கு சென்ற வேளை இடைவழியில் மறித்த இனந்தெரியாத கும்பல் கடை உரிமையாளர் மீது கடுமையாக தாக்குதல் நடாத்தியுள்ளனர். குறித்த வீதியில் கார் ஒன்றில் காத்திருந்த இனந்தெரியாதோர் கடைக்குச் சென்றவரை இடையில் வழிமறித்து பொல்லுகளால் கடுமையாக தலை, கை என்பவற்றில் தாக்குதல் நடாத்தியுள்ளனர். தாக்குதல் நடாத்திய இருவர் தம்மை […]

Read More

தேசிய மக்கள் சக்தியுடன் இணைய மாட்டோம் – சி.வி.கே. சிவஞானம்..!

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்பட மாட்டாது என இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த அதன் தலைவர் சி.வி.கே. சிவஞானம் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவது தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

Read More