2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தொடர்பான பூர்வாங்கத் திட்டமிடல் மற்றும் அபிவிருத்திப் போக்குகள் குறித்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கிடையே நேற்று ஜூலை 16ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

ஜனாதிபதி, தற்போதைய நிலைமைகள் குறித்து நிதி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதுடன், வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளைக் கோரும் சுற்றறிக்கை வெளியாகியுள்ளதாகவும், ஜூலை 31 வரை அதனை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி அதிகாரிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

இதில் வரவுசெலவுத் திட்டம் நாட்டை மீட்டெடுக்கும் நோக்கில் அமைய வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும் டிஜிட்டல் மயமாக்கல், பொதுப் போக்குவரத்து, மற்றும் கிராமிய பொருளாதார பங்களிப்பு ஆகிய துறைகளில் முன்னுரிமை வழங்குமாறு அறிவுறுத்தினார்.

வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதுடன், அதன் பயன்கள் மக்களுக்கு எட்டுமாறும் கட்டுப்பாடுகள் மற்றும் செயல்முறைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

பல முக்கிய அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here