23 ஆவது சர்வதேச சிறுவர் ஓவியப்போட்டியில் இலங்கை சிறுமி முதலிடம் !
ஜப்பானில் உள்ள யுனிசெப் அலுவலகமும், ஜப்பான் தரச்சான்றிதழ் அலுவலகமும் இணைந்து நடத்திய 23 ஆவது சர்வதேச சிறுவர் ஓவியப்போட்டியில் இலங்கை சிறுமி முதலிடம் பெற்றுள்ளார்.
புத்தளத்தில் உள்ள தேசிய பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் பி மலிஷா நிர்மலி (15) என்ற சிறுமியே இவ்வாறு முதலிடம் பெற்றுள்ளார்.
“இயற்கையை நேசிக்கும் குழந்தைகள்” என்ற தலைப்பில் இந்த ஓவியம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் உலகின் 83 நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான சிறுவர்கள் சமர்ப்பித்த ஓவியங்களில் இலங்கை முதலாம் இடத்தைப்பெற்றுள்ளது.
காலியில் உள்ள இலங்கை சிறுவர் கலை நிலையத்தின் பணிப்பாளர் பியசேன டி சில்வாவின் வழிகாட்டலின் கீழ் இலங்கையிலிருந்து சிறுவர்கள் இந்த கலைப் போட்டிக்கு ஓவியங்களை சமர்ப்பித்திருந்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
![]()