நடிகர் தனுஷ் அவரே இயக்கி,நடித்து வெளியான திரைப்படம் ராயன்.
கடந்த 26ஆம் திகதி இப் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
அந்த வகையில் இத் திரைப்படத்தில் தனுஷின் தம்பியாக நடித்த சந்தீப் கிஷன் மற்றும் அபர்ணா பாலமுரளி இருவருக்கும் இடையிலுள்ள காதலை வெளிப்படுத்துவதாக ‘வாட்டார் பாக்கெட்’ பாடல் அமைந்திருந்தது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், கானா காதர் எழுத்தில், சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் குரலில் வெளிவந்த இப் பாடல் 25 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
அதுமட்டுமின்றி இப் பாடலை பல பேர் ரீ க்ரியேட் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.