28 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!
வடகடலில் வைத்து சுமார் 28 மில்லியன் ரூபா பெறுமதியான 70 கிலோ கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள கஞ்சாவை படகில் ஏற்றிச் சென்ற போது கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.
மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் படகும் மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
![]()