கான்பூரில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவத் டெஸ்ட் போட்டியில் கலீத் அகமது-வின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ஓட்டங்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் என கிராண்ட் டபுள் சாதனையை எட்டிய வீரர் என்கிற பெருமையை ரவீந்திர ஜடேஜா பெற்றுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கபில் தேவ் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய இருவர் உட்பட 10 வீரர்கள் மட்டுமே இந்த சாதனையை எட்டியுள்ளனர்.
இந்தச் சாதனையைப் படைத்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையையும் ஜடேஜா பெற்றுள்ளார்.
சர்வதேச தரவரிசையில் ஜடேஜா இரண்டாவது இடத்தில் உள்ளார், இங்கிலாந்து ஜாம்பவான் இயன் போத்தம் நம்பர் 1 இடத்தில் அமர்ந்துள்ளார். அவர் 72 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியிருந்தார், ஜடேஜா தனது 73வது டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டி அசத்தி இருக்கிறார்.
300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய 7வது இந்திய பந்துவீச்சாளர் ஜடேஜா ஆவார். அதற்காக அவர் 17,428 பந்துகளை எடுத்துக்கொண்டார். அதேநேரத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் 15,636 பந்துகளில் எடுத்துக்கொண்டு இந்திய அணிக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.