Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

கீழே விழுந்த முதியவர் உயிரிழப்பு யாழில் சோகம்.!!

வீதியில் மோட்டார் சைக்கிள் வந்ததால் நிலைகுலைந்து கீழே விழுந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை கிழக்கு, தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த கதிரன் ஐயாத்துரை 73 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து...
Homeஉள்நாட்டுச்செய்திகள்304 ஆயுர்வேத வைத்தியர்களுக்கான நியமனங்கள் விரைவில் வழங்கப்படும் – சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

304 ஆயுர்வேத வைத்தியர்களுக்கான நியமனங்கள் விரைவில் வழங்கப்படும் – சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

ஆயுர்வேதத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட 304 வைத்தியர்களுக்கு விரைவில் நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் தையிட்டி சித்த போதனா வைத்தியசாலையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆயுர்வேதத் துறையில் 1,000க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இருந்தாலும், அனைவரையும் அரசாங்கப் பணியில் சேர்க்க முடியாது எனவும், இன்டர்ன்ஷிப் முடித்த பின்னர் உள்ளூரிலும் வெளிநாட்டிலும் பணி வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

மேலும், சில வைத்தியர்கள் சுற்றுலாத் துறையிலும் பணி வாய்ப்புகள் பெறுவதற்கான ஆலோசனைகள் இடம்பெற்று வருகின்றன என்றும், பாரம்பரிய வைத்திய முறைகளுக்கான நிதியளிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Verified by MonsterInsights