December 17, 2025
350 வகையான மருந்துகளின் விலை உடனடியாகக் குறைப்பு: தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

350 வகையான மருந்துகளின் விலை உடனடியாகக் குறைப்பு: தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!

Nov 18, 2025

350 வகையான மருந்துகளின் விலைகள் உடனடியாக குறைக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் துறையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குழந்தை நோய்கள், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல நோய்களுக்கு வழங்கப்படும் 350 வகையான மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிக விலையில் மருந்துகளை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டு, பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதாகவும், அதன்பின் மருந்துகளின் விலைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதாகவும்  டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *