தமிழ்நாட்டின் ஈரோடில் உள்ள தனியார் கோயிலொன்றில் ஒரு எலுமிச்சம்பழம் 35,000 ருபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
அதாவது மகாசிவராத்திரயின் போது சிவபுரி கிராமத்துக்கு அருகே பழம் பூசைய்யன் கோயிலில் அந்த எலுமிச்சை உள்ளிட்ட மேலும் சில பொருள்கள் சிவனுக்கு படைக்கப்பட்டது.
சுமார் 15 பக்தர்கள் ஏலத்தில் கலந்துகொண்டனர். கடைசியில் ஈரோட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவர் அதனை ஏலத்தில் எடுத்துள்ளார்.
ஏலத்தில் வெற்றிபெறுபவர் செல்வச் செழிப்புடன் வாழ்வார் என்பது அந்தக் கிராம மக்களின் நம்பிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.