காலி – தவலம பகுதியில் இடம்பெற்ற பெண் ஒருவரின் கொலை தொடர்பான தகவல்களை நான்கு வருடங்களின் பின்னர் காலி குற்றப்புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் இரண்டாவது கணவரினால் கொலை செய்யப்பட்டு, தவலம – ஹல்லகந்த பகுதியிலுள்ள வனப் பகுதியில் உள்ள மலசலகூட குழியில் சடலம் மறைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 6 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த நிலுக்ஷிகா சந்தமாலி என்ற 29 வயதான மூன்று பிள்ளைகளின் தாயின் சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனது முதலாவது கணவரை பிரிந்த நிலுக்ஷிகா சந்தமாலி, தனது மூன்று பிள்ளைகளுடன் “பதல சாந்த” என அழைக்கப்படும் நபருடன் வாழ்ந்து வந்த நிலையில், காணாமல்போயிருந்ததாக தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதற்கமைய சடலம் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் அணிந்திருந்த காதணியும் கிடைத்துள்ளது.

மேலும் பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here