Tamil News Channel

42 இலட்சம் ரூபா பெறுமதியில் சென்மேரிஸ் விளையாட்டரங்கு திறப்பு!

IMG-20240710-WA0188

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக்கழக விளையாட்டு அரங்கு நேற்றுமுந்தினம்  திறந்து வைக்கப்பட்டது.

சென்மேரிஸ் விளையாட்டு கழக தலைவர் பி .றஜித் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கட்டைக்காடு பங்கு தந்தை அ. அமல்ராஜ் ,சமுர்த்தி உத்தியோகத்தர்,கிராம அபிவிருத்தி சங்க உத்தியோகத்தர், கட்டைக்காடு அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்,சென்மேரிஸ் நாடகமன்ற தலைவர்,சென்மேரிஸ் கடற்தொழிலாளர் சங்க தலைவர், விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் குறித்த நிகழ்வு ஆரம்பமானது முதல் நிகழ்வாக மரியாம் பிள்ளை யாக்கோப் றஜீத்குமார் நினைவாக அவரது உறவினரால் 42 லட்சம் ரூபா பெறுமதியில் கட்டப்பட்ட சென்மேரிஸ் விளையாட்டரங்கு செல்வக்குமார் அவர்களால் நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கட்டைக்காடு சென்மேரிஸ் அணியினருக்கும் வவுனியா இளம்தென்றல்  அணியினருக்கும் இடையிலான சினேகபூர்வ உதைப்பந்தாட்ட போட்டி இடம்பெற்றது.

நிகழ்வின் இறுதியில் சென்மேரிஸ் விளையாட்டு அரங்கை நிர்மானித்து தந்த கட்டிடத் தொழிலாளர்களுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கப்பட்டதுடன் வவுனியா இளந்தென்றல் அணியினருக்கும் நினைவு சின்னம் வழங்கப்பட்டது.

இறுதியாக 42 இலட்சம்  பெறுமதியில் சென்மேரிஸ் விளையாட்டு அரங்கை அமைத்துக் கொடுத்த செல்வகுமார் அவர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதுடன் அவருக்கான நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது என எமது பிராந்திய செய்தியாளார் தெரிவித்தார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts