ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
5ஆவது முறையாகவும் அதிபராக பதவியேற்றதன் மூலம், ஜோசப் ஸ்டாலினுக்குப் பிறகு அதிக காலம் பதவி வகித்த ரஷ்யத் தலைவர் என்ற பெருமையை புடின் பெற்றுள்ளார்.
ரஷ்ய அதிபர் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது.
இந்த மூன்று நாட்களில், 87 சதவீத வாக்குகள் பெற்ற புடின் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றார்.
இதை தொடர்ந்து நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய புடின் ரஷ்ய ஜனநாயகத்தை பாராட்டினார்.
மேலும் ரஷ்யாவில் உள்ள ஜனநாயகம் மேற்கு நாடுகளை விட மிகவும் வெளிப்படையானது என்றும் கூறினார்.