Wednesday, March 11, 2026

50 வீதமான வாக்கு பெறுவாரா? அரியநேந்திரன்..!

Must Read

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரான அரியநேந்திரனுக்கு வடக்குக் கிழக்கில் உள்ள 12 லட்சம் வாக்குகளில் 50 வீதமான வாக்குகள் கிடைக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் EPRLF கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் வவுனியாவில் உள்ள வாடி வீட்டில் பொதுக் கட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும், வவுனியாவை சேர்ந்த சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த எட்டு ஆண்டுகளாக ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தென்னிலங்கையைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். தமிழ் மக்கள் காட்டிய அந்த நல்லிணக்க செய்தியை ஆட்சியில் இருந்த எந்த ஜனாதிபதிகளும் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வையோ அல்லது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை பிரச்சனையோ இதுவரை காலமும் தீர்க்கவில்லை.

ஆகவே அந்த அடிப்படையிலே நாங்கள் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தியுள்ளோம். வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் வடக்கு கிழக்கிற்கு வெளியே இருக்க கூடிய மக்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாகும். இதற்கான தேர்தல் பிரச்சாரம் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருக்கின்றது.

வடக்கு கிழக்கிலே 12 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் உள்ளார்கள். அதில் 50 வீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெறுவதற்கான பணிகளை நாங்கள் ஆரம்பித்து இருக்கின்றோம். நிச்சயமாக இந்த தேர்தலிலே தமிழ் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு மற்றும் அரசியல் ரீதியான மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.  இதில் 50 வீதமான மக்கள் வாக்களிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அத்துடன் யுத்தம் முடிந்து 15 ஆண்டு காலமாக இருக்கின்றது. ஆனால் சர்வதேச நாடுகளும் தமிழ் மக்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இலங்கை அரசாங்கமும் இந்த பிரச்சினை தீர்ப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆகவே தமிழ் மக்களுக்கு ஒரு தேசிய இன பிரச்சனை ஒன்று இருக்கின்றது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

 

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img
Verified by MonsterInsights