நாட்டைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை இன்றும் (18.08) நாளையும் (19.08) மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.
மழையுடனான காலநிலையால் நாடளாவிய ரீதியில் 8522 குடும்பங்களை சேர்ந்த 26,898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற (ஆரம்ப நிலை) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணம் கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 150 மில்லி மீற்றர் அளவுக்கு மேல் கடுமையான மழை பெய்யக்கூடும்.
நாட்டில் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடனான மழை பெய்யும். அத்துடன் வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் மணிக்கு 30 – 40 வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மழையுடனான காலநிலை நிலவுவதால் கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற (ஆரம்பக்கட்ட) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில பகுதிகளுக்கு செம்மஞ்சள் நிற (இரண்டாம் கட்ட) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழையுடனான காலநிலையால் நாடளாவிய ரீதியில் 8522 குடும்பங்களை சேர்ந்த 26,898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.