January 12, 2026
63 வயது இரகசிய காதலனுடன் கணவரை கொலை செய்த மனைவி..!
News News Line Top Updates புதிய செய்திகள்

63 வயது இரகசிய காதலனுடன் கணவரை கொலை செய்த மனைவி..!

Apr 12, 2024

அக்கரைப்பற்று பகுதியில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரின் 33 வயது மனைவி மற்றும் 63 வயதுடைய இரகசிய காதலன் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் அக்கரைப்பற்று கோளாவில் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட இச் சம்பவம் கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.

இந்நிலையில் அக்கரைப்பற்று வைத்தியசாலையில்  நேற்று   நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது,

கழுத்தை அறுத்ததால் ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவரது மனைவி மற்றும் இரகசிய காதலன் ஆகிய இருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சடலம்  அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *