நேற்றுமுந்தினம் கொழும்பில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த 15 வயது சிறுவர்கள் தற்செயலாக தவறிவிழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விசாரனையின் போது குறித்த சிறுமிக்கு உயரமான இடங்களில் இருந்து புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இருப்பதாகவும், அவரது மொபைல் போனில் இதுபோன்ற பல புகைப்படங்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
ஆகவே இவர்கள் புகைப்படம் எடுப்பதற்காக 67வதுஉயர்மாடிக்கு சென்றிருக்கலாம் என்றும் புகைப்படம் எடுக்கும் போது தவறி விழுந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் தற்செயலாக விழுந்ததா அல்லது தற்கொலை முயற்சியா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸ் அதிகாரி டிஐஜி தல்துவா மேலும் தெரிவித்தார்.
15 வயதுடைய இருவரின் சடலங்களும் , நேற்றைய தினம் பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்ததையடுத்து அவர்களது சடலங்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.