Tamil News Channel

8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி – மன்னாரில் சம்பவம்…. !

mannar

மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 4 ஐச் சேர்ந்த மாணவர்கள் 8 பேர் திடீர் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் தரம் 4 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் தனது வீட்டில் எண்ணை எடுப்பதற்காக காய வைத்திருந்த ஆமணக்கு விதைகளை பாடசாலைக்கு கொண்டு வந்து சக மாணவர்களுடன் அதனை உட்கொண்ட நிலையிலே குறித்த மாணவர்கள் திடீர் சுகயீனமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது .

இந்த நிலையில் குறித்த  மாணவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts