ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பங்குடாவெளி தளவாய் வீதியினை எமது இராஜாங்க அமைச்சின் 85 மில்லியன் செலவில் கொங்கிறீட் வீதியாக புணர்நிர்மானம் செய்யப்பட்டது.
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களுடன் இணைந்து மக்கள் பாவனைக்கு இவ் வீதி திறந்து வைக்கப்பட்டது.
விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பினை பிரதான ஜீவனோபாயமாக கொண்ட இப்பிரதேசத்தில் விவசாய உள்ளீடுகள் மற்றும் உற்பத்திகளை எடுத்துச் செல்வதற்கான பிரதான போக்குவரத்து மார்க்கமாக காணப்படும் இவ் வீதியினை செப்பனிட்டு தருமாறு பிரதேச விவசாயிகள் கோரிக்கையினை முன்வைத்தனர்.
இக் கோரிக்கையின் அடிப்படையில் இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 02 km நீளமான இவ் வீதியினை கொங்கிரீட் வீதியாக செப்பனிட்டு வைபவ ரீதியாக மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் திரு.ரஞ்சித் ரூபசிங்க, பிரதேச இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஜீவானந்தம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திரு. சூரிய பண்டார, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், பொதுமக்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.