முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகிய ஆறுபேர் மீது, 97 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாக சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இன்று (ஜூலை 17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னர், ஒவ்வொரு பிரதிவாதிக்கும் ரூ.50,000 ரொக்க பிணை மற்றும் ரூ.10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், குற்றச்சாட்டாளர்களின் வெளிநாட்டு பயணங்களைத் தடை செய்யும் வகையில், அவர்களின் கடவுச்சீட்டுகளை பறிமுதல் செய்து, கைவிரல் அடையாளங்களைப் பெற்று அறிக்கை பெறுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வழக்கு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையின் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



