சஞ்சு சாம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் இணையவுள்ளதாக பரவிய தகவலை ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) நிர்வாகம் மறுத்துள்ளது.

காயம் காரணமாக கடந்த ஐபிஎல் சீசனில் சஞ்சு சாம்சன் பல போட்டிகளை தவிர்த்த நிலையில், அவரது மாற்றாக ரியான் பராக் அணியை வழிநடத்தினார். இதையடுத்து, சஞ்சுவுக்கும் அணி நிர்வாகத்துக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக செய்திகள் வந்தன.

அத்துடன், சஞ்சுவை CSK அணிக்கு டிரேடிங் முறையில் மாற்றும் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும், அதற்குப் பதிலாக ஷிவம் துபே, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை கோரலாம் எனவும் கூறப்பட்டது.

இவற்றை முழுமையாக நிராகரித்துள்ள ராஜஸ்தான் ரோயல்ஸ் நிர்வாகம், சஞ்சு சாம்சன் அணியிலேயே தொடருவார் என்று உறுதி செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here