நடிகர் விஜய்யின் கடைசி படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ 2026 பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்டுள்ளது.

அரசியலுக்கு முழுமையாக கவனம் செலுத்தவுள்ளதாக அறிவித்துவிட்டதால், ரசிகர்கள் இந்தப் படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

H.வினோத் இயக்கும் இந்தப் படத்தில், விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இதற்கிடையில், படத்தின் கிளைமாக்ஸ் குறித்து இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.

அதன்படி, இறுதிக் கட்டத்தில் விஜய் humanoidகள் உடன் மோதும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. மேலும், அந்த சண்டைக் காட்சி சட்டசபை முன் நடக்கும் வகையில் அமைந்திருக்கும் என்ற தகவலும் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here