பிரபல WWE வீரர் ஜோன் செனா அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

17 முறை உலக செம்பியன் பட்டத்தை வென்ற இவர், WWE வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

அண்டர்டேக்கர், தி ராக், ப்ரோக் லெஸ்னர் போன்ற சூப்பர் ஸ்டார்கள் இருந்த காலத்திலும், WWE அடையாளத்தை முன்னோக்கி கொண்டு சென்ற முக்கிய வீரர்களில் ஜோன் செனா ஒருவர்.

ஜோன் செனா மல்யுத்த வீரராக மட்டுமல்லாமல் ஹாலிவுட் நட்சத்திரமாகவும் பிரபலமாக உள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் 13ஆம் திகதியோடு, வோஷிங்டன் நகரில் அமெரிக்க நேரப்படி இரவு 7.30 மணிக்கு அவரது கடைசி போட்டி நடைபெற உள்ளது.

இந்த அறிவிப்பின் பின்னர், அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள், காணொளிகளை பகிர்ந்து ஜோன் செனா ஓய்வு பெறுவதை அனுசரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here