இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (09) தீர்ப்பளித்துள்ளது.
2006-ஆம் ஆண்டில் அபிவிருத்தி லொட்டரி சபையின் தலைவராக குணவர்தன பதவி வகித்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் தொடர்பான வழக்குகளில் இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல் அறிவித்தார்.
அந்த நிறுவனத்திற்காக வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்று, அதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தி, ஊழல் குற்றத்தைச் செய்ததாக குணவர்தன மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இதேநேரம் தண்டனை வழங்குவது தொடர்பாக நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் தண்டனையை நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.








