யாழிலிருந்து கதிர்காமம் சென்ற பஸ் நேற்று மாலை திருகோணமலையில் பாரிய விபத்தில் சிக்கியதில்  30 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி A15 திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக பயணித்த பஸ் மூதூர் கெங்கைத்துறை பாலம் அருகே இன்று பிற்பகல் 5 மணியளவில் தடம்புரண்டு 15 அடி பள்ளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் எந்தவித உயிர் ஆபத்தும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here