இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இந்தவகையில் இருஅணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (21) இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30க்கு இங்கிலாந்தின் மென்செஸ்டரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று ஆரம்பமாகும் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 25ஆம் திகதி வரை மென்சஸ்டரில் இடம்பெறவுள்ளது.

2ஆவது போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரை லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இடம்பெறள்ளது.

மேலும் 3ஆவதும், இறுதியுமான போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை லண்டன் கியா ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள பதினொருவரின் விபரங்களை நேற்று இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

இதன்படி முதலாவது டெஸ்ட் போட்டியில் நிஷான் மதுஷ்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா, தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, மிலான் ரத்நாயக்க, அசித பெர்னாண்டோ மற்றும் விஷ்வா பெர்னாண்டோ ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

அத்துடன் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளரான மிலான் ரத்நாயக்க இன்று இலங்கை அணிக்காக டெஸ்ட் அறிமுகத்தைப் பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here