நிகவெரட்டிய கந்தேகெதர பிரதேசத்தில் துண்டு துண்டாக வெட்டி தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் காட்டு யானையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நிகவெரட்டிய கொடுஅத்தவல காப்புப் பகுதிக்கு அண்மித்த வீடொன்றிற்கு அருகில் சுற்றித் திரிந்த காட்டு யானையொன்று மின்சார கேபிள்களினால் கொல்லப்பட்டு பின்னர் ரம்பத்தினால் துண்டு துண்டாக வெட்டி எரித்து எஞ்சிய பாகங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேசவாசிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நிகவெரட்டிய பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் தள காரியாலய அதிகாரிகள் உரிய இடத்தை ஆய்வு செய்த போது இந்த காட்டு யானையின் உடல் பாகங்களை கண்டெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த காணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நிகவெரட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here