நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பயணிகள் லொறி ஒன்று எரிபொருள் பவுசருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தை அடுத்து, இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.

சாலையில் சென்ற மேலும் பல வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. நைஜீரியாவில் மோசமான வீதி அமைப்புகளால் இதுபோன்ற விபத்துகள் நடப்பது வழக்கமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here