“விழியிலார்க்கு வழிகாட்டுவோம் வெள்ளைப் பிரம்புக்கு மதிப்பளிப்போம்” எனும் தொனிப்பொருளில் இன்று காலை இலங்கை பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபவணி இடம்பெற்றது.

காலை 8.30 மணிக்கு யாழ்.வெலிங்டன் சந்தியில் இருந்து ஆரம்பமான நடைபவணி மத்திய பேரூந்து நிலையம் வரை முன்னெடுக்கப்பட்டது.

போரணியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி நடராஜர் காண்டீபன், இலங்கை பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலையத்தின் உறுப்பினர்கள், லயன்ஸ் கழக உறுப்பினர்கள், பாடசாலை மணவர்கள் என பலர் கலந்துகொண்டனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here