பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.

ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.

அந்தவகையில், முகம் பளிச்சென்று மிளிர உதவும் வெள்ளரிக்காய் Facepackஐ எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

1. தேவையான பொருட்கள்

  • வெள்ளரிக்காய்- ½
  • தயிர்- 2 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

முதலில் வெள்ளரிக்காயை மிருதுவான பேஸ்டாக அரைத்துக்கொள்ளவும்.

பின் அதனுடன் தயிர் சேர்த்து நன்கு கெட்டியாக கலந்துக்கொள்ளவும்.

இந்த கலவையை முகத்தில் நன்கு தடவி 20 நிமிடங்கள் அப்படியே விட்டு நன்கு காயவிடவும்.

இறுதியாக குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.

2. தேவையான பொருட்கள்

  • வெள்ளரி- ½
  • தேன்- 1 ஸ்பூன்
  • சர்க்கரை- 1 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

வெள்ளரிக்காயை ஒரு பேஸ்டாகக் அரைத்து அதனுடன் தேன் சேர்த்து கலக்கவும்.

பின் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்துமுகத்தில் தடவி, வட்ட இயக்கங்களில் மெதுவாக ஸ்க்ரப் செய்யவும்.

பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here