கொட்டாவை – மஹரகம வீதியில் கொட்டாவை பிரதேசத்தில் வேன் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்து சனிக்கிழமை (26.10.2024) இடம்பெற்றுள்ளது.

வேனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவ்விபத்தின்போது வேனில் மூன்று பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாவை மாநகர சபையின் தீயணைப்பு படையினரால் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here