ஒக்டோபர் 31ஆம் திகதி தீபாவளி விடுமுறையைத் தொடர்ந்து மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்து அரச தமிழ் வழிப் பாடசாலைகளும் நவம்பர் 01ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மூடப்படும்.
எவ்வாறாயினும், இந்த மேலதிக விடுமுறையை உள்ளடக்கும் வகையில் இந்த பாடசாலைகள் நவம்பர் 09 ஆம் திகதி (சனிக்கிழமை) இயங்கும் என வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.








