தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி நேற்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தம் இரவு 10 மணி வரை முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய இறுதிக்குள் திருப்திகரமான தீர்மானம் வழங்கப்படாவிட்டால் நாளைய தினம் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன மேலும்  தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here