நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்தனர்.
நைஜீரியாவின் கோகி மாநிலத்திலுள்ள சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது படகில் 200 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விபத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.








