வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களமும், இந்தியத் துணைத் தூதரகமும் இணைந்து நடாத்தும் வட மாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை யாழ். கலாசார மத்திய நிலையத்தில் நேற்றையதினம் (03.12.204) ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது.
மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த சந்தை, காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை நடைபெறவுள்ளது.
மேலும் மாலை 5.00 மணி முதல் 8.00 மணிவரை விசேட கலாசார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
நேற்றையதினம் ஆரம்ப நாள் நிகழ்வில், இந்திய துணைத் தூதரகத்தின் முதல்நிலை அதிகாரி, வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
இந்த சந்தையில் நெசவு உற்பத்திகள், கைப்பணி உற்பத்திகள் ,உணவு உற்பத்திகள் ,ஆடை உற்பத்திகள், விவசாய உற்பத்திகள் மற்றும் தொழில் வழிகாட்டல், வியாபார ஆலோசனைகள் உள்ளடங்கலாக 60 கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்








