பிட்டகோட்டை பகுதியில் வைத்து 9 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் வர்த்தகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும் வர்த்தகர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மற்றுமொரு வர்த்தகரிடம் இலஞ்சம் பெறும் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்ட வர்த்தகரின் உறவினர் ஒருவரின் காணிக்கான நட்டஈட்டை விரைவுபடுத்துவதாக உறுதியளித்து இந்த இலஞ்சம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here