இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்குமிடையே சந்திப்பு கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் நடந்துள்ளது.
இதன்போது இரு தரப்பினருக்குமிடையே பல பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டான.
அங்கு, இந்திய அரசாங்கம் அதன் நெருங்கிய அண்மை நாடான இலங்கைக்கு பல தசாப்தங்களாக வழங்கிய ஆதரவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும், திவால்நிலையைத் தவிர்க்கவும் தேவையான ஆதரவைத் தொடர்ந்து வழங்குமாறு இந்திய உயர் ஸ்தானிகரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.








