தலைமன்னாருக்கு வடக்காக உள்ள கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 33 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த மீனவர்களுடைய 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை முன்னெடுத்த வழமையான கண்காணிப்பு நடவடிக்கையின்போது, குறித்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களை கரைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here