ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள இனுகு மாகாணத்தில் நேற்று மாலை பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லொறி சென்றுகொண்டிருந்தது.

இனுகு-ஒனிஸ்டா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லொறி முன்னே சென்ற வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் டேங்கர் லொறியில் இருந்த பெட்ரோல் தீப்பற்றி வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இதில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here