கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் கடந்த 16 ஆம் திகதி ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மோதரை – பஞ்சாநந்த மாவத்தை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை (13/02/2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹெந்தளை – வத்தளை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவராவார்.
இந்த கைது நடவடிக்கையின் போது, 13 கிராம் மற்றும் 420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சந்தேக நபர் ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரின் நெருங்கிய நண்பர் எனவும் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து மோதரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








