கொழும்பு – வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிங்கபுர பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் நேற்று வியாழக்கிழமை (06/03/2025) வெல்லம்பிட்டி  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here