தலை மன்னார் ஊர் மனை பகுதியில் உள்ள காட்டு பகுதியில் 18 மில்லியன் ரூபாய்  மதிப்புள்ள கேரள கஞ்சா பொதிகள் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்  பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து தலைமன்னார் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் தலைமன்னார் ஊர்மலை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டது.

18 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 85 கிலோ  200 கிராம் கேரள கஞ்சா பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த போதைப்பொருள் இந்தியாவிலிருந்து கடல் வழியாக அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட போதைப் பொருள் மேலதிக விசாரணைக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

[மன்னார் நிருபர்எஸ்.ஆர்.லெம்பேட்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here