திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்ட 88 பேரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 26 பேர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அமைப்புசார்ந்த குற்றச்சாட்டுகளுக்காக சோதனையிற்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், மீதமுள்ள நபர்களின் சொத்துக்களும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
முடக்கப்பட்ட சொத்துகளில் நிலங்கள், வீடுகள், வங்கிக் கணக்குகள், வாகனங்கள், நகைகள், வணிக...
யாழ்ப்பாணத்தின் பலாலி கிழக்கிலுள்ள அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு நேற்று முதல் பொதுமக்கள் சுதந்திரமாக சென்று வழிபட உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் மக்கள் எந்தத் தடையுமின்றி ஆலயத்தில் சென்று வழிபாடு செய்யலாம் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன்,...
பாணந்துறை, வேகட பகுதியில் கடந்த 29 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்திற்கு முன்பாக நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை, கவிராஜ மாவத்தையைச் சேர்ந்த 24 வயதான இளைஞர்...
கிளிநொச்சி - பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிராய் குளத்தை அண்டிய பகுதியில் நேற்று சனிக்கிழமை (31) மாலை 6.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை இனம் தெரியாதவர்களால் சரமாரியான வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞன் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 27 வயதுடைய கந்தசாமி பிரணவன் எனும் பூநகரி செம்பங்குன்று பகுதியைச் சேர்ந்த இளைஞன் என...
அவுஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு செவ்வாய்கிழமை (03/05/2025) இலங்கைக்கு வருகிறார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருணா ஜெயசேகர உள்ளிட்டவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுப்பட உள்ளார்.
இதேவேளை, லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகள் நிலையத்தில் இடம்பெறவுள்ள சிறப்பு...
தேசிய வரி வாரம் நாளை திங்கட்கிழமை (02) ஆரம்பமாகிறது.
இதன் தொடக்க விழா நாளை காலை (02.06.2025) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற உள்ளது.
வரி சக்தி என்ற பெயரில் வரி வாரத்தை செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன், நாளை முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையான வாரத்தில் வரி செலுத்துதல்...
கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்ற உள்ளுராட்சி நிறுவனங்களின் நகர முதல்வர்கள், பிரதி நகர முதல்வர்கள், தவிசாளர்கள் மற்றும் பிரதி தவிசாளர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
அதன்படி 22 மாவட்டங்களுக்கு அண்மையில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று பெரும்பான்மையை பெற்ற அரசியல் கட்சிகள், சுயாதீன குழுக்களால் குறித்த...
2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை தாய்லாந்து நாட்டைச் தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி வென்றுள்ளார்.
72வது உலக அழகி போட்டி இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் சம்மேளன மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்றுது.
இந்த ஆண்டு, 108 போட்டியாளர்கள் உலக அழகி போட்டியில் பங்கேற்கின்றதுடன், அவர்கள் 4 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டு...
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 2 ஆவது தகுதிகாண் போட்டியில் இன்றைய தினம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
அஹமதாபாத்தில் இன்றிரவு 7.30க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 19 புள்ளிகளுடன்...
ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் பரவிவரும் ஒமிக்ரோன் வைரஸின் 2 உப திரிபுகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
எனினும் இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும், சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல வைத்தியசாலைகளிலிருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகளின் அடிப்படையில்...
கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ஈரானில் தாக்குதல் நடத்தியதையடுத்து, இரு நாடுகளுக்கிடையேயான மோதல் மோசமாகத் தீவிரமடைந்துள்ளது.
இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவின் அலுவலகத்தின் தகவலின்படி, ஈரான் இதுவரை இஸ்ரேலின்...