அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதுடைய இளைஞர்கள் யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களில், ஒருவரிடமிருந்து 50 கிராம் ஹெரோயினும், மற்றையவரிடமிருந்து ஆயிரம் மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத்துக்கும் இடையில், சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதுமட்டுமன்றி இதன்போது, இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை...
தனியார் பல்கலைக்கழகங்களின் கல்வியியல் பட்டங்களின் தரம் குறித்து முறையான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நேற்றுமுன்தினம் ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
இலங்கையில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைந்த உயர்கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும்...
கொழும்பு மாநகர சபையின் முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக, சபையின் ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்தார்.
மாநகர முதல்வர் பதவிக்கு தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தவொரு முக்கியக் கட்சிக்கும் தனிப்பட்ட பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், மாநகர சபையின் அதிகாரத்தை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாக குழப்ப நிலை நிலவுகிறது.
பொதுமக்களுக்கு...
யாழ்ப்பாணத்தின் பலாலி கிழக்கிலுள்ள அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு நேற்று முதல் பொதுமக்கள் சுதந்திரமாக சென்று வழிபட உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் மக்கள் எந்தத் தடையுமின்றி ஆலயத்தில் சென்று வழிபாடு செய்யலாம் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன்,...
நேற்று இரவு ஹொரணை பொலிஸ் பிரிவின் தம்பர பகுதியில் தடி ஒன்றால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் தம்பர, மீவனபலான பகுதியைச் சேர்ந்தவராவார்.
தனது வீட்டில் உறவினர் ஒருவரின் மகனுடன் மது அருந்திக்கொண்டிருந்த வேளையில், இருவருக்கிடையிலான வாக்குவாதம் மோசமாக மாறி, அந்த...
யாழ்ப்பாணத்தில் 10 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் செயல்படும் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா நடைபெற்று வந்த வேளையில், சந்தேகநபர் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயற்சித்ததாக...
இஸ்ரேலும் ஈரானும் தற்போதைய பதற்ற நிலையைத் தவிர்த்து, அமைதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென இலங்கை அரசு வேண்டுகோள்விடுத்துள்ளது..
இரு நாடுகளுக்கிடையேயான சமீபத்திய சம்பவங்கள் தொடர்பாக தீவிர கரிசனையை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கைத்தூதரகங்கள் முழுமையான கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த நாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் தொடர்பாகவும் அவ்வப்போது தகவல்களைப்...
இலங்கையுடன் உள்ள வணிக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவுஸ்திரேலியாவின் விக்டோரியன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், பாரம்பரியமான தேயிலை, இறப்பர் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட பொருட்கள் மட்டும் அல்லாமல், ஏற்றுமதியை பல்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்தும் வாய்ப்புகள் குறித்து இலங்கை அதிகாரிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக மெல்போர்னில் அமைந்துள்ள இலங்கை...
2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் சீனிக்காக விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரியினை 25 சதம் வரை குறைத்த விடயம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் எவ்விதமான குற்றவியல் குற்றமும் கண்டறியப்படவில்லை எனச் சட்டமா அதிபரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா...
இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை ஈரான் நிராகரித்துள்ளது. இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் தற்போது நான்காவது நாளாக நீடித்து வருகிறது.
இந்த...