Thursday, June 11, 2026
No menu items!

சினிமா

பல்வேறு சாதனைகளை படைத்துள்ள சூர்யாவின் ‘கருப்பு’

சூர்யாவின் கருப்பு திரைப்படம் மே 15,அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் 3வது வாரத்தில் உலகளவில் ₹300 கோடிக்கு மேல் வசூலித்தது. இது தற்போது சூர்யாவின் அதிக வசூல் செய்த படமாகியுள்ளது. அதேபோல 8 நாட்களில் ₹200 கோடிக்கு மேல் வசூலித்து. 2026 இல் ₹200 கோடியைத் தாண்டிய முதல் தமிழ்ப் படமாகியுள்ளது. 9வது நாளில்...

ரன்வீருக்கு விடுத்த தடையை திரும்ப பெற்ற திரைத்துறை அமைப்பு

மேற்கு இந்திய சினிமா பணியாளர்களது கூட்டமைப்பு (FWICE), நடிகர் ரன்வீர் சிங்குக்கு எதிராக பிறப்பித்திருந்த ஒத்துழையாமை (அவருடன் பணியாற்ற வேண்டாம் என்ற) உத்தரவை (NCD) திரும்பப் பெற்றுள்ளது. திரைப்பட இயக்குநர் ஃபர்ஹான் அக்தரின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வந்த, 'டோன் 3' திரைப்படத்திலிருந்து ரன்வீர் விலகியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, திரையுலக அமைப்பு அனுப்பிய தொடர்ச்சியான மனுக்களுக்கு...

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் முதல் முறையாக 'சிக்மா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை லைக்கா மற்றும் ஜே.எஸ்.ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ள நிலையில் தமன் இசை அமைத்து வருகிறார். ஜேசன் சஞ்சய் கனடாவில் திரைப்பட தயாரிப்பு தொடர்பான டிப்ளமோ படித்துள்ளார்....

ஜூலையில் வெளியாகிறது அதர்வாவின் ‘இதயம் முரளி’ திரைப்படம்

ஆகாஷ் பாஸ்கர் இயக்கத்தில் அதர்வா முரளி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் 'இதயம் முரளி' படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும்படியான நடிகரான அதர்வா அண்மையில் வெளியான 'பராசக்தி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்லதொரு வரவேற்பைப் பெற்றார். தற்போது அவர் 'இதயம் முரளி' படத்தில் நடித்து முடித்துள்ளார். அதர்வாவின்...

ஒரு வாரத்துக்குள் 50 கோடி வசூல் செய்துள்ள ‘அதிரடி’ திரைப்படம்

மலையாள திரைத்துறையில் பிரபல நடிகர்களாகவிருக்கும் பெசில் ஜோசப்,டொவினோ தோமஸ் ஆகியோர் நடிப்பில் அண்மையில் வெளியான அதிரடி திரைப்படம் இன்று தமிழிலும் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெற்றியடைந்த 'லோகா' படத்தில் கௌரவ வேடத்தில் நடித்த டொவினோ தோமஸ் வில்லனாக நடிக்கும் அதிரடி படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக ஆறு நாட்களில் இந்திய மதிப்பில்...

இசை அரசனை காயப்படுத்தும் எண்ணம் சிறிதும் இல்லை; ‘கருப்பு’ தயாரிப்பு நிறுவனம்

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா மற்றும் திரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில், இசைஞானி இளையராஜா பாடல் ஒன்றுக்கான காப்புரிமைக்காக வழக்கு தொடர்வது போன்று ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த காட்சி சர்ச்சையான நிலையில் தயாரிப்பு நிறுவனம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக...

முதல்வர் விஜய்க்கு இயக்குநர் வெங்கட் பிரபுவின் அன்பளிப்பு

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு அரசியல் தரப்பினர் மற்றும் சினிமா துறையின் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் வெங்கட் பிரபு இன்று முதல் அமைச்சரை சந்தித்து அவருக்கு அன்பளிப்பொன்றை வழங்கியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கிய 'கோட்' திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த படத்தில் விஜய்யின் கார் இலக்கத் தகடு...

தமிழக அரசியல் மாற்றத்தால் அதிர்ச்சியடைந்தேன்; ரஜினி

தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான ரஜினிகாந்த், விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றமை குறித்தும் தன் மீதான சமீபத்திய ஊடக ஊகங்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவும் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் மாற்றத்தால் தான் "மிகுந்த ஆச்சரியம்" அடைந்ததாக அவர் கூறியுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது பேசிய ரஜினிகாந்த், முன்னாள்...

பொக்ஸ் ஒபீஸில் 50 நாட்களை கடந்த ‘துரந்தர் 2’

பொலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் துரந்தர். அந்த படம் உலகம் முழுவதும் சுமார் 1350 கோடிக்கு மேல் வசூல் செய்து மெகா ஹிட் ஆனது. இந்த படத்தை பி62 ஸ்டூடியோஸ், ஜியோ ஸ்டூடியோஸ் ஆகியன தயாரித்திருந்தன. இதன் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம், 'துரந்தர்...

திரிஷ்யம் -3 திரைப்படத்தின் டீசர் வெளியானது!

திரிஷ்யம் -3 திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் இந்திய மதிப்பில் 75 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த படம் கமல்ஹாசன் கௌதமி ஆகியோரின் நடிப்பில் தமிழில் ரீமேக்...
- Advertisement -

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...