Wednesday, June 10, 2026
No menu items!

சினிமா

”லோகா” படம் வசூலில் மாபெரும் சாதனை – 11 நாட்களில் ரூ.185 கோடி!

மலையாளத்தில் இருந்து சமீபத்தில் வெளிவந்தது மாபெரும் வரவேற்பை பெற்று இருக்கும் திரைப்படம் லோகா. இப்படத்தை நடிகர் துல்கர் சல்மான் ரூ. 30 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷன் இப்படத்தில் கதையின் நாயகியாக நடிக்க, நஸ்லன், சாண்டி மாஸ்டர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவான இப்படத்தை டொம்னிக் அருண் இயக்கியிருந்தார். கடந்த மாதம்...

வெளியான மதராஸி திரைப்படம்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் மதராஸி. இப்படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்க வித்யுத் ஜாம்வல் வில்லனாக நடித்துள்ளார். மேலும் விக்ராந்த், பிஜு மேனன், ஷபீர் என பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இன்று திரையரங்கில் மதராஸி திரைப்படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது....

ஆக்ஷன் கிங் அர்ஜுனின் புதிய படத்தின் அப்டேட் !

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் நடிகர் அர்ஜுன். இவரை ஆக்ஷன் கிங் அர்ஜுன் என செல்லமாக அழைப்பார்கள். ஜெய்ஹிந்த், ஜென்டில்மேன், முதல்வன், ஏழுமலை, ரிதம் என பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் லியோ, விடாமுயற்சி ஆகிய திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து மிரட்டியுள்ளார். சமீபத்தில், அர்ஜுன் அவரது 63 - வது பிறந்தநாளை...

ரஜினி, லோகேஷ் கூட்டணி ‘கூலி’ வெளியீடு ; இரசிகர்கள் கொண்டாட்டத்தில்!

லோகேஷ் கனகராஜ், மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தரமான 5 படங்களுக்கு பிறகு இயக்கியுள்ள படம் தான் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின், சத்யராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்தும் வழக்கம் போல் தரமாக...

தனுஷ் காதலிக்கும் நடிகை இவரா? ஆச்சரியத்தில் இரசிகர்கள்!

நடிகர் தனுஷ் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன் பிறகு சட்டப்படி அவர்களுக்கு நீதிமன்றம் கடந்த வருடம் விவாகரத்து வழங்கியது. தற்போது தனுஷ் தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் படங்கள் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் பிரபல நடிகை மிருனாள் தாகூர் உடன் காதலில் இருப்பதாக பாலிவுட் மீடியாக்களில் செய்திகள் வெளியாகி...

வணிக உலகில் புதிய முயற்சி: ராஷ்மிகா மந்தனா!

தென்னிந்திய நடிகை ராஷ்மிகா மந்தனா வாசனைத் திரவிய உற்பத்தி ஒன்றை ஆரம்பித்துள்ளார். ‘டியர் டைரி’ என்ற வாசனைத் திரவிய உற்பத்தி ஒன்றை அவர் ஆரம்பித்து அறிமுகப்படுத்தியுள்ளார். அழகு மற்றும் வாசனைத் திரவிய உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனமொன்றுடன் இணைந்து அவர் இதைத் தயாரிக்கிறார்.

சேலையில் அதுல்யா ரவி கியூட் புகைப்படங்கள்..!!

நடிகை அதுல்யா ரவி தற்போது அழகிய சேலையில் கியூட்டான  புகைப்படங்களை பதிவிட்டிருக்காங்க, அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஜிவி பிரகாஷுக்கு நன்றி சொன்ன ஜெய்க்கொடி அமல்ராஜ்!!

ஜிவி பிரகாஷும் சைந்தவியும் கடந்த வருடம் தாங்கள் பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டனர். மேலும் நீதிமன்றத்திலும் சட்டப்பூர்வ விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க தனது கரியரிலும் முழு கவனத்தையும் மும்முரமாக செலுத்திவருகிறார் ஜிவி பிரகாஷ். இந்நிலையில் பிளாக்மெயில் படத்தின் தயாரிப்பாளர் ஜெயக்கொடி எமோஷனலாக பேசியிருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மானின் அக்கா மகன் என்ற அடையாளத்தோடு...

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை !

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாகா படத்தில் நடித்த ரன்யா ராவ் சில மாதங்களுக்கு முன்னர் தங்க கடத்தல் வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். துபாயிலிருந்து தனது ஜாக்கெட்டில் வைத்து 15 கிலோ தங்கத்தை கடத்தி வந்தார். அதனை கண்டுபிடித்த அதிகாரிகள் உடனடியாக ரன்யாவை கைது செய்தார்கள். இந்நிலையில் அவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. கர்நாடக...

கியாரா அத்வானி – சித்தார்த் மல்ஹோற்றாவிற்கு பெண் குழந்தை – ரசிகர்களின் வாழ்த்து வெள்ளம்!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. எம்.எஸ். தோனி அன்டோல்ட் ஸ்டோரி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து ஹிந்தியில் படங்கள் நடித்து வந்த கியாரா அத்வானி ராம் சரணின் நடிப்பில் வெளிவந்த வினய் விதேயே ராமா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். முதல் குழந்தை; பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்ஹோற்றாவை...
- Advertisement -

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...