சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வெற்றி!
சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாம்கட்ட கலந்துரையாடல் வெற்றிபெற்றுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்கள் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (22.11.2024) நடைபெற்றிருந்தன. சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் தலைமையில் சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு கலந்துகொண்டது. இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த
வெளிநாட்டுக் கடன்கள் குறைக்கப்படும் போது நாட்டின் வங்கிச் செயற்பாடுகளை இலகுபடுத்த முடியும்; ஃபிட்ச் ரேட்டிங்க்!
வெளிநாட்டுக் கடன்கள் ஊடான அழுத்தங்கள் குறைக்கப்படும் போது, நாட்டின் வங்கிச் செயற்பாடுகளை இலகுபடுத்த முடியும் எனவும், ஃபிட்ச் ரேட்டிங்க் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வங்கிச் செயற்பாடுகள் கடந்த பொருளாதார நெருக்கடிக் காலத்தில் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகி இருந்தன. எனினும் அடுத்தக்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவாக அந்தச் சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக்
இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான புதிய விமான சேவை ஆரம்பம்…!
இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான நேரடி புதிய விமான சேவை வியாழக்கிழமை (21.11.2024) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவையை சிங்கப்பூரை தளமாகக் கொண்ட குறைந்த கட்டண Jetstar Asia விமான நிறுவனம் ஆரம்பித்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை (21.11.2024) காலை சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திலிருந்து புதிய விமான சேவையின் முதல் விமானமான Jetstar Asia விமான நிறுவனத்திற்கு சொந்தமான 3K333 என்ற
பொரளையில் தீப்பற்றிய சொகுசு வாகனம் !
பொரளை-கடுவெல வீதியில் தலங்கம லங்காசபா வித்தியாலயத்திற்கு எதிரே இன்று காலை 9.45 மணியளவில் சொகுசு வாகனம் ஒன்று (Land Rover Discovery 5) தீப்பற்றி எரிந்துள்ளது. சம்பவ இடத்திற்கு கோட்டே மாநகர பை தீயணைப்பு பிரிவினர் வந்து தீயை அணைத்தனர். இத் தீ விபத்தின் போது உயிர்சேதங்கள் எதுவும் ஏற்பட்வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா வில் இலங்கைக்கு முக்கிய இடம்!
சர்வதேச வர்த்தக சட்டம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவிற்குத் இலங்கை தெரிவாகியுள்ளது. ஐ.நா பொதுச் சபையினால் சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவிற்கு (UNCITRAL) தெரிவுசெய்யப்பட்ட 31 உறுப்பு நாடுகளில் இலங்கையும் அடங்குவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆசிய பசுபிக் குழுவிலிருந்து இலங்கை ஒரு ஆசனத்திற்கு போட்டியிட்டு 177 வாக்குகளைப் பெற்றது. ஆசிய பசுபிக் குழுவிற்குள் கிடைத்த இரண்டாவது
அர்ச்சுனா பௌத்த மதத்தை பின்பற்றினாரா..? வெளியானது உண்மை..!
இலங்கையின் நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளமான parliament.lk – இல் வைத்தியர் அர்ச்சுனாவினுடைய தனிப்பட்ட தகவல்களில் அவர் பௌத்த மதம் என வெளியிடப்பட்டது போன்று படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த விடயம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாம் (வெற்றி Tv) https://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/3535 என்ற இணையத்தள முகவரியில் பார்வையிட்ட போது வைத்தியர் அர்ச்சுனாவின் தகவல்களில் அவர் இந்து என குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற
வயோதிப பெண் ஒருவர் படுகொலை!
கிருலப்பனை கலிங்க மாவத்தையில் உள்ள கொலோம்தோட்டை சரசவி உயன வீட்டுத் தொகுதியில் 70 வயதுடைய பெண் ஒருவர் நேற்று பிற்பகல் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது மகள் மற்றும் பேரக்குழந்தையுடன் வீட்டுத் தொகுதியின் இரண்டாவது மாடியிலுள்ள வீடொன்றில் வசித்து வந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு பெண் கொலை
லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு மீண்டும் விளக்கமறியல்!
லொஹான் ரத்வத்தவின் மனைவி சட்டவிரோதமான முறையில் சொகுசு மகிழுந்து ஒன்றைப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி, டிசம்பர் 2ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நுகேகொட நீதவான் நீதிமன்றில் இன்று (22) அவரை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிரிஹான பகுதியில் உள்ள லொஹான் ரத்வத்தவின் மனைவியின்
அமெரிக்க அரச பணியிலிருந்து விலகியவர் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிப்பு!
அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் எம்.டி எண்டர்சன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் பேராசிரியருக்கு வழங்கி வைக்கப்பட்டது. கொழும்பு டி. எஸ்.சேனநாயக்க கல்லூரியின் பழைய மாணவரான இவர்,
பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலை தொடர்பில் வெளியான தகவல்..!
பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலை எக்காரணம் கொண்டும் மூடப்பட மாட்டாது என, சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியில், பாராளுமன்ற உணவகம் மூடப்படவுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் வினவிய போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலை மூடப்பட மாட்டாது. ஆனால் அந்த வசதியை யாரும் துஷ்பிரயோகம் செய்யாமல் இருப்பதை அரசாங்கம் கவனித்துக்கொள்ளும் என்றும்,