Tuesday, April 14, 2026
No menu items!

புதிய செய்திகள்

இன்றைய நாளுக்கான வானிலை..!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 - 45 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும். சூரியனின் தெற்கு நோக்கிய...

158வது பொலிஸ் தினம் யாழில்!

இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் 158வது ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அந்தவகையில் நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் 158வது பொலிஸ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனடிப்படையில் யாழ்ப்பாணத்திலும் 158வது பொலிஸ் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதன்போது, ஆரிய குளத்தில் அமைந்துள்ள நாக விகாரையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. பின்னர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி...

மன்னார் மாவட்டத்தின் வளத்தை பாதுகாக்க கோரி எதிர்வரும் 10ஆம் திகதி பேரணிக்கு வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் அழைப்பு!

'மன்னார் மாவட்டத்தின் வளத்தை பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மன்னாரில் அமைதி பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர்   அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று புதன்கிழமை (4) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, வடமாகாண கடற்றொழிலாளர்...

தமிழன் தமிழனாக இருக்க வேண்டும்; பா.அரியநேத்திரன்!

சிதறிக்கிடக்கும் தமிழ் தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து  ஒரு குடையின் கீழ் கொண்டு வரும்  நோக்குடன்  தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் களம் இறக்க பட்டுள்ளதாகவும், இந்த நாட்டின் 9 ஆவது ஜனாதிபதியாக வருகிறவருக்கு ஒரு பாடமாக இது அமைய வேண்டும் என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் ரெலோ அலுவலகத்தில் இன்று...

யாரும் தூக்கிலிடப்படவில்லை : வடகொரிய அதிபர் மறுப்பு..!

வடகொரியாவில் அரசு அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார், வடகொரிய அதிபர் கிம் ஜாக் உன். வட கொரியாவில், கடந்த ஜூலை மாதத்தில் பெய்த கனமழையின் விளைவாக வெள்ளம் ஏற்பட்டதுடன் நிலச்சரிவும் ஏற்படக் காரணமாயிருந்தது. இந்த பேரழிவுகளின் விளைவாக, 4000-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதித்தது மட்டுமின்றி, சுமார் 15000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும்,...

பகிரங்க சேவை ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்படுகிறது..!

பகிரங்க சேவை ஆணைக்குழுவில் உறுப்பினர் ஒருவரின் பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கு விருப்புடைய தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 54 ஆம் உறுப்புரையில் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறாக, பாராளுமன்ற உறுப்பினராக, மகாண சபை உறுப்பினராக, உள்ளூரதிகாரசபை உறுப்பினராக இருக்கும் எவரும் பகிரங்க சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்குத் தகைமையுடையோராக இருக்கமாட்டார்கள். மேலும் ஆணைக்குழுவின் ஓர் உறுப்பினராக...

கோட்டாபய ராஜபக்ஷவின் இனவாத ஆட்சியால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்தது ; ரிஷாட் பதியுதீன் !

மதுபான "லைசன்ஸ்களுக்காக" ரணிலை ஆதரித்தோர், இரகசியமாக மதுபான "கோட்டாக்களை" பெற்றுக்கொண்டோரின் விபரங்கள், எதிர்வரும் சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் பகிரங்கப்படுத்தப்படுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, செவ்வாய்க்கிழமை (03) மன்னாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, கோட்டாபய ராஜபக்ஷவின் இனவாத ஆட்சியால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்தது. சிங்களப் பெரும்பான்மை வாக்குகளாலேயே, ஆட்சிக்கு வந்ததாக மமதையுடன் நடந்துகொண்டார் கோட்டா. மதங்களைப் புண்படுத்துமளவுக்கு அவரது மனநிலை இறுமாப்படைந்தது. கொரோணாவில் மரணித்த முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தீயில் எரித்தார். இந்த அராஜகத்துக்கு உடந்தையாக இருந்த அமைச்சர்கள், எம்.பி.க்களே இன்று ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துள்ளனர். நாங்கள் செய்தவற்றை நிறுத்துவதற்கென்றே, இங்குஒரு இராஜாங்க அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். கட்டுக்கரைக்குளம், வியாயடிக்குளம், நெடுங்கண்டல் குளம் மற்றும் அஹத்திக்குளம் போன்ற விவசாயக் குளங்களைப் புனரமைத்து, இருபோக நெற்செய்கைக்கு வாய்ப்புக்களை வழங்கவுள்ளோம். இங்கே வெள்ளமாகத் திரண்டுள்ள மக்கள் பணத்துக்காகவோ, சாப்பாட்டுப் பார்சல்களுக்காவோ சேர்த்த கூட்டமல்ல. சஜித் பிரேமதாசவை வெல்லவைக்கும்  ஒரே வேட்கையோடு சேர்ந்த கூட்டம். சஜித்தின் வெற்றிக்காக அமோக ஆதரவளித்த பெருமையில் முதலிடம் பிடிக்க, மன்னார் மாவட்ட மக்கள் முந்திக்கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு பாலம் அமைத்து வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்வோம்” என்றார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள கருத்து!

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) கடமைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களை மதிப்பிடும் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது. மத்திய வங்கியின் வகிபாகம் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு தெரியப்படுத்துவது மிகவும் முக்கியமானது என பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளதாக பாராளுமன்ற அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தற்போதைய நிதி...

கோட்டாபய ராஜபக்ஷவின் சகாக்களைத் தோற்கடிக்க இத்தேர்தலைப் பயன்படுத்துங்கள் : எம்.பி ரிஷாட்

கொடுங்கோலன் கோட்டாவின் சகாக்களைத் தண்டிக்க இத்தேர்தலை பயன்படுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, நேற்று(03.09) மாலை புத்தளத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, அன்புக்குரிய தாய்மார்களே, இளைஞர்களே, தந்தையர்களே மத குருமார்களே சகல சமூகங்களும்...

பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் வீதம் அதிகரிப்பு; ஜயந்த  சமரவீர!

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப்பெறும் தரப்பினர் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் வீதம் சடுதியாக அதிகரித்துள்ளமை பாரிய அச்சுறுத்தலாகும் என பாராளுமன்ற உறுப்பினர்  ஜயந்த  சமரவீர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04)  இடம்பெற்ற அமர்வின் போது போதைப்பொருள் ஒழிப்புக்கான அவதானிப்புக்கள் மற்றும் விதிப்புரைகளை முன்வைப்பதற்கான நியமிக்கப்பட்ட...
- Advertisement -

Latest News

திரிக்கப்பட்ட ஒலிப்பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது;லங்கா நிலக்கரி நிறுவனம்

லங்கா நிலக்கரி நிறுவனம் (பிரைவேட் லிமிடெட்), தனது அவசரகால நிலக்கரி கொள்முதல் செயல்முறை தொடர்பான தொலைபேசி உரையாடல் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை...