இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை…!
கடந்த ஒன்பது நாட்களில் மாத்திரம் இலங்கையில் 1,050 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் மொத்தமாக 33,795 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிக டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், இதுவரையில் 13,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
11 நாட்கள் இறைச்சி மற்றும் மதுபான கடைகள் பூட்டு…!
கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, நாளை (10.08) முதல் பதினொரு நாட்களுக்கு கண்டி நகர எல்லையிலும் மற்றும் அதனைச் அண்மித்துள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுமாறு கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. பெரஹரா வீதி பவனி வரும் 10ம் திகதி தொடக்கம் 20ம் திகதி பெரஹரா தினத்தன்று வரை மதுபானக்கடைகள் மூடப்படும் எனவும், மேலும் குறித்த அக்காலப்பகுதியில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் மதுபானம் விற்பனை செய்வதுடன்
வெனிசுவெலா ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை…..!
வெனிசுவெலாவில் சமூக ஊடகங்களில் ஒன்றான எக்ஸ் சமூக ஊடகம் (X) 10 நாட்களுக்கு முடக்கப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ வியாழக்கிழமை (08) அறிவித்துள்ளார். இது தொடர்பில் அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய போது, வெனிசுவெலாவின் தேசிய தொலைத்தொடர்பு ஆணைக்குழு முன்னர் டுவிட்டர் என்று அழைக்கப்பட்ட எக்ஸ் சமூக ஊடகத்தை 10 நாட்களுக்கு முடக்குவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு அமைய நான் கையெழுத்திட்டுள்ளேன்
நாய்கள் உள்ளிட்ட பல விலங்குகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிரித்தானிய முதலை நிபுணர்……!
பல நாய்களை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதை செய்த பிரபல பிரித்தானிய விலங்கியல் நிபுணருக்கு அவுஸ்திரேலியாவில் 10 ஆண்டுகள் மற்றும் ஐந்து மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 53 வயதுடைய பிரபல நபரான ஆடம் பிரிட்டன் மிருகவதை மற்றும் விலங்கு கொடுமை தொடர்பான 56 குற்றச்சாட்டுகளை ஒப்புகொண்டுள்ளார். பிரிட்டன் விலங்குகளை சித்திரவதை செய்து அதன்போது, விலங்குகள் உயிரிழப்பதையும் படமெடுத்து புனைப்பெயர்களைப் பயன்படுத்தி
அறிமுகமாகும் புதிய எம்.பி..!
உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து ஏற்பட்ட மனுஷ நாணயக்காரவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு பந்துலால் பண்டாரிகொடவை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தியானது தீர்மானித்து அவரின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐந்து டிப்பர் வாகனங்கள்!
யாழ்.சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐந்து டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் ஐவரை கைது செய்துள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன அவர்களின் தலைமையில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் நேற்றையதினம் மூன்று டிப்பர் வாகனங்களும் நேற்றுமுந்தினம் இரண்டு டிப்பர் வாகனங்களும் கைப்பற்றப்பட்ட நிலையில் ஐந்து சந்தேக நபர்களும் கைதாகியுள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர்கள் அவதி..!
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இயங்கிவந்த இரு CT ஸ்கேன் இயந்திரங்களும், இரு MRI ஸ்கேன் இயந்திரங்களும் செயலிழந்துள்ளதாக தேசிய கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். அத்தோடு இயந்திர செயலிழப்பு காரணமாக வைத்தியசாலைக்கு சிகிச்சைப் பெற வரும் நோயாளர்களும் வைத்தியசாலை சேவை ஊழியர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாகவும் சானக்க தர்மவிக்ரம மேலும் குறிப்பிட்டுள்ளார். தேசிய வைத்தியசாலையில்
ICC_ODI தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்ட இந்திய அணி…..
ICC வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலில், இந்திய அணி தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. இதேவேளை இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதையடுத்து தரவரிசையில் ஆறாவது இடத்திற்கு இலங்கை அணி முன்னேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
SJB இல் இருந்து விலகிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா!
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, SJB தலைவர் பதவியில் இருந்து இன்று இராஜினாமா செய்துள்ளார். பொன்சேகாவினால் அனுப்பப்பட்ட இராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக SJB பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
ஒருதொகை பீடி இலைகள் மீட்பு!
புத்தளம் – எரம்புகொட களப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்று (08) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடற்படையினர் குறித்த பிரதேசத்தில் விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றை சோதனைக்குட்படுத்திய போது அதில் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த லொறியில் 21 உரமூடைகளில் அடைக்கப்பட்ட 689 கிலோ கிராம்