போக்குவரத்து சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றம்..!

போக்குவரத்து சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றம்..!

Jul 14, 2024

போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து மீண்டும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தெருக்கள், பாலங்கள், மதகுகள் மற்றும் தொடருந்து பாதைகள் உட்பட பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்கான வசதிகளை வழங்குவதற்காக இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Read More
மக்கள் அரண் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட- சஜித்

மக்கள் அரண் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட- சஜித்

Jul 14, 2024

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவை ஆட்சிக்குக் கொண்டு வர வாக்குத் திரட்டும் திட்டத்தை ஜே.வி.பி தரப்பினரே முன்னெடுத்தாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் அரண் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை அழித்த திருடர்களை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக ஜே.வி.பியினர் செயற்பட்டாலும், அந்தத் திருடர்களுடன்

Read More
சிறிய தாயால் தாக்கப்பட்ட 13வயது சிறுமி..!

சிறிய தாயால் தாக்கப்பட்ட 13வயது சிறுமி..!

Jul 14, 2024

மட்டக்களப்பு வாழைச்சேனை மஜீமா நகர்ப் பகுதியில் 13 வயது சிறுமியைத் தாக்கிய அவரது சிறிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமியைத் தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். கைதானவர் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தாக்குதலுக்குள்ளான

Read More
நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்க முதன்முதலாக ஆதரவு வழங்கியவர் வடக்கு மாகாண ஆளுநரே – யாழ்ப்பாணத்தில் பிரதமர் தெரிவிப்பு!

நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்க முதன்முதலாக ஆதரவு வழங்கியவர் வடக்கு மாகாண ஆளுநரே – யாழ்ப்பாணத்தில் பிரதமர் தெரிவிப்பு!

Jul 14, 2024

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு  வெள்ளிகிழமை (12/07/2024) நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. அந்தவகையில் 165 பேருக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றிய  ஆளுநர் அவர்கள், மிக நீண்டகாலமாக உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக, அமைய அடிப்படையில்

Read More
மட்டக்களப்பில் மீண்டும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் தலைமை காரியாலயம் திறந்து வைப்பு!!

மட்டக்களப்பில் மீண்டும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் தலைமை காரியாலயம் திறந்து வைப்பு!!

Jul 14, 2024

மட்டக்களப்பில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் புதிய காரியாலயம் மீண்டும் திருகோணமலை வீதி தாண்டவன்வெளியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14); மாவட்ட அமைப்பாளர் பா.சந்திரகுமார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த கட்டகொடவால்  சம்பிரதாயபூர்வமாக புதிய காரியாலயத்தை நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது. எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மாவட்ட ரீதியாக ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின்

Read More
முன்னாள் எதிர்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்..!

முன்னாள் எதிர்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்..!

Jul 14, 2024

முன்னாள் எதிர்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது . பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் பண்ணாகம் அண்ணாகலைமன்றம் ஆகியன இணைந்து வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்றலில் அமைக்கப்பட்டுள்ள அமிர்தலிங்கத்தின் திருவுருவ சிலையின் முன்றலில் நினைவேந்தல்  முன்னெடுக்கப்பட்டது. இதன் பொழுது ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு திருவுருவசிலைக்கு மலர் மாலையும் அணிவிக்கப்பட்டது.

Read More
 போதைப் பொருள் வியாபாரியான பெண் ஒருவர் கஞ்சாவுடன் கைது..!

 போதைப் பொருள் வியாபாரியான பெண் ஒருவர் கஞ்சாவுடன் கைது..!

Jul 14, 2024

திருகோணமலை ஈச்சலம்பற்று பிரதேசத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவரை 12 கிராம் 11 மில்லிகிராம் கஞ்சாவுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) காலையில் கைது செய்துள்ளதாக ஈச்சலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து  இன்று காலை ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  வெருகல் முகத்துவாரம் பிரதேசத்தில் குறித்த  கஞ்சா வியாபரியான பெண்ணின் வீட்டை பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு

Read More
இடம்பெற்றது அஸ்வெசும” நலன்புரி பயனாளி குடும்பங்கள் வலுவூட்டல் திட்டத்தின் கலந்துரையாடல்- திருகோணமலை

இடம்பெற்றது அஸ்வெசும” நலன்புரி பயனாளி குடும்பங்கள் வலுவூட்டல் திட்டத்தின் கலந்துரையாடல்- திருகோணமலை

Jul 14, 2024

அஸ்வெசும” நலன்புரி பயனாளி குடும்பங்கள் வலுவூட்டல் திட்டத்தின் கலந்துரையாடலானது பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் அவர்களின் பங்குபற்றலுடன் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. எமது நாடானது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நாடாகும். இருப்பினும் மூவின மக்களும் இணைந்து வாழக்கூடிய

Read More
ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் – கிளிநொச்சியில்..!

ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் – கிளிநொச்சியில்..!

Jul 14, 2024

பாடசாலை மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின்  கீழ் கிளிநொச்சி மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வுகள் இரண்டு கட்டங்களாக கிளிநொச்சி தனியார் விருந்தகம் ஒன்றில் நடைபெற்றது. கிளிநொச்சி வடக்கு வலயத்திற்கு காலை 9.00மணிக்கும் கிளிநொச்சி தெற்கு வலயத்திற்கு காலை 11.00மணிக்கும் இருவேறு நிகழ்வாக இடம்பெற்ற நிகழ்வில் சுமார் 662 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் நிகழ்வின் விருந்தினர்களாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர்

Read More
ஜனாதிபதி ரணிலுக்கும் வைத்தியர் அர்ச்சுனாவுக்கும் இடையே நாளை கலந்துரையாடல் இடம்பெறுமா?

ஜனாதிபதி ரணிலுக்கும் வைத்தியர் அர்ச்சுனாவுக்கும் இடையே நாளை கலந்துரையாடல் இடம்பெறுமா?

Jul 14, 2024

வைத்தியர் அர்ஜுனா அவர்கள் நாளையதினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வைத்தியர் அர்ஜுனா அவர்கள் வடக்கு சுகாதாரத் துறையில் காணப்பட்ட பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்தி இருந்த நிலையில், அது குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது. அத்துடன் இன்றையதினம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரை

Read More