அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை
எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 13ஆம் திகதி வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் நடைபெறும் என கல்வி அமைச்சின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மத்திய மாகாணம், சபரகமுவ மாகாணம் மற்றும் ஊவா
யாழ்ப்பாணத்தில் கலாசாரங்களை சீர்கெடுக்கும் போதை விருந்து !
யாழ்ப்பாணத்தில் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற போதை விருந்து தொடர்பில் பொலிஸ் விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் விருந்து ,கொழும்பை தளமாக கொண்டு செயற்படும் சமூக ஊடக அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தின் கலாசாரங்களை சீர்கெடுக்கும் வகையில் இவ்வாறான விருந்துகளை தென்னிலங்கை அமைப்புக்கள் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக சீர்கேடான இந்த செயற்பாடு
இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 15 கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள்
கல்பிட்டி இரணைதீவுக்கு அருகில் இந்தியாவில் இருந்து கடல் வழியாக படகொன்றில் கொண்டு வரப்பட்ட போதை மாத்திரைகளுடன் இருவர் கல்பிட்டி கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த படகில் இருந்து சுமார் 15 கோடி ரூபாய் பெறுமதியான 5 இலட்சத்து 70 ஆயிரம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் , குறித்த போதை மாத்திரைகள் 10 பெட்டிகளில் பொதிகளாக வைக்கப்பட்டிருந்ததாகவும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட
படு தோல்வியின் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை கிரிக்கெட் அணி
2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் 7 போட்டிகளில் தோல்வியடைந்து இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று(10) அதிகாலை 05.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு அவர்களை வரவேற்க வருகைதந்தனர். இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தனர்.
இலங்கையில் 2024 ஜனாதிபதி தேர்தல் – இலங்கை அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை
உரியநேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது ஜனநாயகத்திற்கு மிக அவசியமான விடயம் ஆகும். இதனால் இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையின் அரசமைப்பின்படி ஏனைய தேர்தல்களும் இடம்பெறும் என அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்தவருடம் நடைபெறவேண்டிய தேர்தல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம், எனவும் சுதந்திரமான
கடற்படை வீரரொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணம் : திருகோணமலையில் சம்பவம்
நாவிக நெவி பண்டார என்ற பெயர் வழங்கப்பட்ட கடற்படை வீரரொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணித்துள்ளார். இன்று (08) அதிகாலை 2.45 மணியளவில் உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இடம்பெற்றுள்ளது. மாத்தளை கன்தேகெதர பகுதியைச் சேர்ந்த கே. எம். டி. எஸ்.பண்டார என்பவரே உயிரிழந்துள்ளார். வேறு எந்த விபரங்களும் வழங்கப்படவில்லை என
நாடு திரும்பிய குவைத்தில் பணியாற்றிய 26 இலங்கைப் பெண்கள்
விசா காலாவதியான நிலையில் குவைத்தில் பணிப்பெண்களாக பணியாற்றிய 26 இலங்கையர்கள் இன்று இலங்கை தூதரகத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர். குவைத்தில் இதுபோன்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டுப் பணிப்பெண்கள் உள்ளனர். அவர்களையும் குழுக்களாக நாட்டுக்கு அழைத்து வரப்படுவதாகவும் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கைத் தூதரக அதிகாரிகள் குவைத்தின் குடிவரவுத் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள்
கொழும்பு தாமரைக் கோபுரத்தில் அறிமுகமாகும் சாகச விளையாட்டு!
கொழும்பு தாமரைக் கோபுரத்தின் உச்சியிலிருந்து கயிற்றின் உதவியுடன் இறங்கும் இந்த சாகச விளையாட்டு ஒன்று அறிமுகமாகவுள்ளது. இதற்கான பரீட்சார்த்த விழா நேற்று (7) இடம்பெற்றது. ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் கோபுரத்திலிருந்து 195 மீற்றர் உயரத்திலிருந்து கீழே இறங்கி, இந்த முன்னோட்டத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர். இவ்வருடம் டிசம்பர் மாத இறுதியில் அல்லது எதிர்வரும் ஜனவரி மாத ஆரம்பத்தில் பொதுமக்களுக்குக்
தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை – மகிழ்ச்சியில் மாணவரகள்
மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு. கமகேவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு கோரிக்கையை விடுத்திருந்தார். இதற்கமைய கோரிக்கையை ஏற்று திங்கட்கிழமை விடுமுறை வழங்குவதற்கும், , அந்த நாளுக்கான கல்வி
காதல் விவகாரம் : கழுத்தறுத்து யுவதியை கொன்ற இளைஞர்
காதல் விவகாரம் தொடர்பில் ஹோமாகம பிரதேசத்தில் ஹோமாகம நீதிமன்ற வீதியில் இன்று புதன்கிழமை (08) காலை யுவதி ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்று களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, அவரது ஆடையில் காணப்பட்ட இரத்த கறையால் சந்தேகமடைந்ந வைத்தியசாலை நிர்வாகம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பேரில் பொலிஸாரால் கைது